இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகள்
இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் தனித்துவத்தை உருவாக்கியது சமூகத்தின் முதல் கட்ட வெற்றி.
அன்று பெருந்தலைவர் அஷ்ரப் மற்றும் இன்னும் பல புத்திஜீவிகளின் ஆலோசனையின் அடிப்படையில்பல இன்னல்களை அனுபவித்த முஸ்லிம் வாலிபர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க வேண்டும் என்ற தீர்வுகளுக்காக உறுதியான அரசியல் தேவை என்ற விடயத்தை உணர்ந்து உருவாக்கப்பட்ட அரசியல் அடையாளம் தான் SLMC ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒரு அரசியல் அடையாளம்.
முஸ்லிம் அரசியல் இலங்கையில் காலூன்றி உறுதியாக செயல்பட்டுக் கொண்டு இருந்த கால கட்டம் அன்று அரசியலில் உறுதியாககாலங்கள் கடந்து செல்லும் போதும் சர்வதேச Islamo of phobia மற்றும் வீரவிதான போன்ற இயக்கங்கள் இலங்கையிலும் தலைவிரித்து ஆட த் துவங்கி விட்டது.
அந்த சூழ்நிலையில் முஸ்லிம் அரசியலில் சில மாற்றங்கள் தேவை என்ற விடயத்தை உணர்ந்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களும் இன்னும் பல புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இரண்டாம் கட்ட அரசியல் நிலைப்பாடு தான்தேசிய ஐக்கிய முன்னணி கட்சி செம்மஞ்சள் மஞ்சள் பச்சை என்ற மூன்று நிறங்களில் புறா சின்னத்துடன் முக்கோண வடிவில் அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டு உருவாக்கிய கட்சிதான் தேசிய ஐக்கிய முன்னணி NUA .
NUA கட்சி வடக்கு கிழக்கு தெற்கு என்ற மூன்று பாகங்களை இணைத்த முக்கோண வடிவில் தேசியக் கொடியின் மூன்று நிறங்களின் பிரதிபலிக்கும் விதத்தில் மூன்று இனங்களையும் உள்ளடக்கி சமாதானப் பறவை சின்னத்தில் தேசிய மட்டத்திலான சிந்தனை போக்குடைய ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருமாற்றம் பெற வேண்டும் என்ற சிந்தனையில் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களால் NUA உருவாக்கப்பட்டது.
இந்தக் NUA கட்சியின் உருவாக்கம் தான் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்கு ஒரு பிரதான காரணமாக அமைந்திருக்கலாம் என்ற ஒரு பரவலான கருத்தும் அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம்.
இலங்கையின் ஜனாதிபதியாக சந்திரிகா அம்மையாரின் ஆட்சி காலப்பகுதியில் ஜனாதிபதி மாளிகையாக பாவிக்கப்பட்டது அலரி மாளிகை.
அந்த இடத்தில் இருந்து தான் வானூர்தி ஏற்றப்பட்டது
அந்த வானுருதி வெடித்து சிதறியது மாவனல்ல அரணாயக்க பகுதியில்.
வானூர்தியில் பெருந்தலைவருடன் பயணித்த பெருந்தலைவரின் செயலாளருக்கு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நவம்பர் 27 அன்று மாவீரர் அனுஷ்டிப்பு கொண்டாடுகின்ற் விடயத்தையும் நாம் அவதானிக்கின்றோம்.
பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் சதியை புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பிறகு கட்சியில் முதலாம் கட்ட பிளவு ஏற்படுகின்றது
அந்தப் பிழவானது ராவ்ப்ஹகீம் மற்றும் பேரியல் அஷ்ரப் இருவருக்கும் இடையில் தலைமைத்துவ பதவியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடம் எடுத்த முடிவின் அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தின் தலைவராக ஹக்கீம் நியமிக்கப்பட்டு அவருடைய பொறுப்பில் அந்தக் கட்சியை கையளிக்கின்றார்கள்.
பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மனைவி பேரியல் அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் NUA கட்சி ஒப்படைக்கப்பட்டது.
அன்று சந்திரிகா அம்மையாரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டணியாக இணைந்து செயல்பட்ட பேரியல் அஷ்ரப் NUA கட்சியின் வளர்ச்சியை கைவிட்டுவிட்டு ஆளும் தரப்புடன் இணைந்து செயல்பட்டார்.
NUA கட்சி செயல்பாடு இல்லாத காரணத்தினால் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்த கட்சிகளின் பட்டியலில் NUA கட்சியு சென்றுவிட்டது.
இலங்கை முஸ்லிம்களின் இரண்டாம் கட்ட அரசியல் வெற்றி NUA கட்சியை மீட்டெடுத்தது.
அந்த சந்தர்ப்பத்தில் அசாத் சாலி அவர்கள் அவர்களின் அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி சட்ட ஆலோசனைகளைப் பெற்று வழக்கு தொடர்ந்து பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட அந்த கட்சியை காப்பாற்றி தன்னகப் படுத்தினார்,என்ற விடயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதனைத் தொடர்ந்து NUA கட்சி அரசியலில் நேரடியாக களமிறங்காவிட்டாலும் கட்சியின் செயல்பாட்டை செய்து கொண்டு அந்த கட்சியை தக்கவைத்து பாதுகாத்து வருகிறார் அசாத் சாலி என்ற விடயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் அரசியலில் இரண்டாம் கட்ட பிளவு ஆரம்பித்தது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தலைவர் ஹக்கீம் தொடர்பில் ஒரு சர்ச்சை உருவாக்கப்படுகின்றது
சிறுசேன குரே அவர்களின் மகள் குமாரி குரே என்ற பெயரை தலைவர் ஹகீம் உடண் இணைத்து ஒரு வதந்தி பரப்பப்படுகின்றது
குமாரி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு அதன் விளைவாக 10 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளிநடப்பு செய்கின்றார்கள்
இந்த சம்பவம் நடக்கும் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக அவருடைய சர்வாதிகாரதை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளிநடப்புச் செய்த 10 உறுப்பினர்களுக்கும் அன்றைய ஆளும் தரப்பில் அமைச்சுப் பதவிகளை அன்றைய ஜனாதிபதி வழங்குகின்றார்
குறித்த சம்பவம் திட்டமிட்டு SLMC என்ற கட்சியை அடியோடு இல்லாமல் ஆக்க வேண்டும்,அந்தக் கட்சியை முற்று முழுதாக வேரோடு புடுங்கி எறிய வேண்டும். என்ற சர்வதேச Islam of phobia சதி திட்டத்தின் அடிப்படையில் வீரவிதான உருவாக்கப்பட்ட அந்த குமாரி குரே கதாபாத்திரத்தின் நோக்கம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
அதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு தேர்தலில் களம் இறங்க கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத அந்த சந்தர்ப்பத்தில் துஆ கட்சி களத்தில் இறங்குகின்றது.
சர்வதேச Islam of phobia அனுசரணையில் பஸில் லுடைய மறைமுகமான தலைமைத்துவ ஆலோசனையில் ரிஷாத் தலைமையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ACMC மயில் சின்னத்தில் புதிதாக களம் இறக்கப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
ACMC கட்சி காலப்போக்கில் பெயரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACM)C என்ற பெயரில் தொடர்ந்தும் மயில் சின்னத்தை அடையாளமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது.
ACMC கட்சியின் செயலாளர் ஆக இருந்தவர் YLS ஹமீத் அவர்கள்.
முஸ்லிம் அரசியலில் மூன்றாம் கட்ட பிளவு ஏற்பட்டது
ரிஷாத் மற்றும் YLS ஹமீத் இருவருக்கும் இடையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற இரண்டு பெயர் களுக்குள் அதிகாரம் மற்றும் உரிமை என்ற விடயங்களுக்கு இடையிலான பிரச்சினைகளும் மனக்குமுறல்களும் உருவாகி இருந்தது.
YLS ஹமீத் சகல விடயங்களையும் அறிந்தவர் காலம் சென்று விட்டார்
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளிநடப்பு செய்த 10 பேர் கொண்ட அந்த அணி மீண்டும் ரன்னில் உடண் சமாதானம் பேசி ஹகீம் உடண் இணைவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சி செய்தார்கள்.ஆனால்அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
அந்தக் காலப்பகுதியில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிட்டத்தட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்களைக் பெற்றிருந்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் 10 உறுப்பினர்களின் வெளிநடப்பிற்குப் பிறகு 6 உறுப்பினர்களாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ், அந்த இக்கட்டான சூழ்நிலை உருவானதன் பின்னர் புதிய உறுப்பினர்களை களம் இறக்கி மீண்டும் 10 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொண்டார்கள் என்று நினைக்கின்றேன்.
அந்த சந்தர்ப்பத்தில் தான் திடீர் தவ்ஃபீக் என்ற ஒருவர் தேசிய பட்டியலின் ஊடாக உள்வாங்கப்பட்டார்.வேறு ஒருவருக்காக தேசிய பட்டியல் கொடுக்கப்பட இருந்த சூழ்நிலையில் திடீர் தவ்ஃபீக் அதை விட்டுக் கொடுக்காமல் அவர் பதவியில் அமர்ந்தார்.
அதே காலகட்டத்தில் ACMC கட்சி உறுப்பினராகவும் தலைவராகவும் ஒரு ஆசனத்தை பெற்று ரிஷாத் பாராளுமன்றத்திற்கு நுழைந்தார்.
முஸ்லிம் அரசியலில் நான்காம் கட்ட பிளவு தொடர்ந்தது.
தேர்தலில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தவர்களை தவிர ஏனையவர்களுக்கு மீண்டும் கை கொடுத்தார் பசீல் ராஜபக்ஷ.
அவருடைய உதவியால் ஹசன் அலி தலைமையில் உருவானது வண்ணத்தி பூச்சி அடையாளத்தில் இன்னும் ஒரு முஸ்லிம் கட்சி .
தொடர்ச்சியாக அரசியலில் ஐந்தாம் கட்ட பிளவு உருவானது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தன்னை வெளியாக்கினால் தனியாக அரசியல் செய்ய வேண்டும் என்று ஹாபிஸ் நசீரால் உருவாக்கப்பட்டது இரட்டை இலை சின்னத்துடன் துஆ கட்சி.
முஸ்லிம் அரசியலில் ஆறாம் கட்ட பிளவு
கிழக்கில் உருவான கட்சிக்கு கிழக்கில் தலைவர் உருவாக வேண்டும் என்ற தலைப்பில் மஹிந்த ராஜபக்ஷ. அனுசரணையில் அக்கரைப்பற்றில் அதாவுல்லா தலைமையில் உருவானது குதிரை சின்னத்தில் இன்னும் ஒரு முஸ்லிம் கட்சி.
முஸ்லிம் அரசியலில் ஏழாம் கட்ட பிளவு
இனவாதம் தலைவிரித்து ஆடும் சந்தர்ப்பத்தில் அரசியல் யாப்பில் இலங்கை குடிமகன் யாருக்கு வேண்டுமானாலும் ஜனாதிபதி பதவியை பெறலாம் என்ற தலைப்பை முற்படுத்தி இனவாத பெரும்பான்மை கட்சியில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கிய வேட்பாளரை பெரும்பான்மை பகுதிகளில் மேலோங்கச் செய்வதற்கு திட்டமிட்டு முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டது.
அந்த Islam of phobia சதி வலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களின் நட்பில் ஒட்டகச் சின்னத்துடன் சிக்கிக் கொண்டார் ஹிஸ்புல்லா.
இத்தனை பிளவுகளையும் துருவி ஆராய்ந்து முஸ்லிம் அரசியல் உருவாக்கப்பட்ட அடிப்படை நோக்கத்தில் இருந்து திட்டமிட்டு பிளவுகளை உருவாக்கி பிரித்து ஆளுகின்ற world dividing policy அரசியலைக் கண்டு வியந்து போனோம்.
உதாரணம் திட்டமிட்டு இனவாதிகள் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இரண்டு ஆளுநர்களையும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் விளக்க வேண்டும் அல்லது விலகிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு பிரச்சினையை நாடளாவிய ரீதியில் உருவாக்கினார்கள்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக பல அரசியல் கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதியில் மூன்று பேரும் சுய விருப்பத்துடன் விலகிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த திகதி 11:30 மணி அளவில் அசாத் சாலி யும் 12:30 மணி அளவில் ஹிஸ்புல்லா விலகிக் கொண்டனர்.
கடைசி வரையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் மாத்திரம் விலகாமல் பிடிவாதமாக நின்ற விடயம் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.
அந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் விலகாத காரணத்தினால் பாராளுமன்றத்தில் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் விலக வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலை உருவாக்கப்பட்டது.
முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை அன்று Islam of phobia,Boneagain team,ViyathMaga அமைப்புகளுக்கு மிக முக்கியமான ஒரு அரசியல் நகர்வாக இருந்தது.
ரிஷாத் அமைச்சர் சுயமாக விலகிக் கொள்ளாத அந்த சந்தர்ப்பம் இனவாதிகளின் தேவைக்கு உறுதுணையாய் அமைந்தது என்று சொல்லலாம்.
ரிஷாத் சுயமாக விலகாத காரணத்தினால்அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் விலகுவதன் மூலம் பெரும்பான்மை மத்தியில் முஸ்லிம்கள் அனைவரும் பச்சை நிறத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற முத்திரையை மறைமுகமாக குத்திவிட்டார்கள்.
இவை அனைத்தையும் பார்த்த எமது RinTv குழுவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
எல்லோரும் ஒன்றாக விலகியது ஒற்றுமைக்கு என்று ஒரு மாய பிம்பத்தை அன்று உருவாக்கினார்கள்.
அன்று ஒற்றுமைக்காக எல்லோரும் வெளியாகி இருந்தால் தொடர்ந்தும் ஏன் ஒரே சின்னத்தில் தேவைக்கு ஏற்ப மாவட்டங்களில் ஒன்றிணைந்து போட்டியிட முடியாமல் இருக்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி எனக்குள் தோன்றியது.
எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் அரசியல் ஆளுமை அற்றவர்களாக கைவிடப்படுவார்கள் என்ற விடயத்தை எமது RinTv குழு உணர்ந்த காரணத்தினால்,
இலங்கை முஸ்லிம்களின் அரசியலை மூன்றாம் கட்ட வெற்றிக்கு வழி வகுக்க வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கினோம்.
RinTv என்ற எமது ஊடக வலை அமைப்பின் ஊடாக ஒரு குழுவை அமைத்து GGI Jabeen Mohamed அவர்களின்தலைமையில் முதல் கட்டமாக அசாத் சாலி அவர்களை சந்தித்து இந்த விடயங்களை தெளிவுபடுத்தி அரசியல் தலைவர்களை சந்திப்பதற்கு ஒரு ஆளுமை தேவை என்பதனால் அவருடைய ஒத்துழைப்புடன் அனைத்து முஸ்லிம் கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டங்கள் வகுக்கப்பட்டது.
அந்த முயற்சிக்கான சகல ஒத்துழைப்புகளையும் அசாத் சாலி அவர்கள் வழங்கினார்.
முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒரு பாரிய முயற்சியை கடந்த காலங்களில் செயல்படுத்தி வந்தோம்.
ஒன்றிணைக்கும் செயல்பாட்டை Sri Lanka United front party என்ற அமைப்பை நிறுவி அதனுடாக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செயல்படும் ஒரு நடைமுறையை உருவாக்கினோம்.
குறிப்பாக இந்தத் பிரிவினை அரசியலை ஒன்று படுத்துவதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முன் ஒரு தெளிவான தீர்மானத்தையும் முன் வைத்தோம்.
பல புத்திஜீவிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தினோம்.
கட்சித் தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம்
பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் ஒன்றுபட்டுமுஸ்லிம் சமூகத்திற்கு தனித்துவமான அரசியல் தேவை என்ற விடயத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் இனக்கம் தெரிவித்தாலும்,ACMC தலைவர் ரிஷாத் மாத்திரம் சந்திக்க நேரம் தரவும் இல்லை இணக்கப்பாட்டை தெரிவிக்கவும் இல்லை.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் மூன்று விதிமுறைகளை முன் வைத்தோம்.
முதல் கட்டமாக
25 மாவட்டங்களில் முஸ்லிம்கள் பரவலாக இருந்தும்,வேறு கட்சிகளில் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களை அடையாளப் படுத்தி அந்த மாவட்டங்களில்தெரிவு செய்யப்பட்ட 6 மாவட்டங்களில் மாத்திரம் அனைத்து முஸ்லீம் தரப்புகளையும் ஒன்றிணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிட்டு அவரவர்களின் அரசியல் கட்சி வரையறைக்குள் பொதுச் சிந்தனையுடன் சமூகப் பற்றுடனும் நாட்டுப் பற்றுடனும் அரசியலில் செயல்பட வேண்டும் என்ற கோட்பாட்டில் ஒன்றிணைக்க முயற்சி செய்த விடயத்தை நீங்கள் அறிந்திருக்கலாம்.
குறிப்பிட்ட மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு இடையில் முரண்பட்ட கருத்துகளினால் தலைமைத்துவங்கள் தீர்க்கமான முடிவுகளை அவர்களுக்கு கொடுக்காத காரணத்தினாலும் ஆறு மாவட்டங்களையும் ஒன்றிணைக்க முடியாமல் இருந்தது.
புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் அந்தத் திட்டம் சாத்தியமாகி வேட்பாளர் களமிறக்கப்பட்டு வெற்றியும் கிடைத்தது.
வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பு அந்த பிரதேச அரசியல் செயல்பாட்டு கட்சிகளுக்கு மாத்திரமே அதிகாரம் கொடுக்கப் பட்டிருந்தது.
இரண்டாவது ஆலோசனை
வடக்கில் ACMC ,கிழக்கில் SLMC,தெட்கில் NUA
மூன்று பிரதேசத்தையும் இணைத்த பொது அரசியல் தன்மையை உருவாக்கி செயல்படுவதுடன் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு மாவட்ட ரீதியான தகுதிகளை வழங்கி வேட்பாளர்களுக்கான வாய்ப்புகளை கொடுத்து வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற ஒன்றுபட்ட தனித்துவமான அரசியல் அமைப்பிற்கு ஒரு பெரும் தலைவராக அரசியல் ஆளுமை மிக்க சாணக்கிய தலைவர் ஹகீம் அவர்களின் பொறுப்பில் சர்வதேச தலைவராக நியமித்து செயல்படும் ஒரு செயல் முறையை அடையாளப்படுத்தினோம்.
மூன்றாவதாக
அனைத்து பிரதேசங்களின் ஜெமியத்துல் உலமா மற்றும் பள்ளி நிர்வாகங்கள் ஒன்றிணைந்து பொருத்தமான வேட்பாளர்களை தெரிவு செய்து கட்சிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஒரு ஆலோசனையை முன் வைத்தோம்.
இவ்வாறான ஆலோசனைகளை முன்வைத்து அவற்றை சமகாலத்தில் நிறைவேற்ற முடியாமல் போனாலும்,இவ்வாறனை இங்கட்டான காலத்தில் பாரிய ஒரு முயற்சியை செய்து இருக்கின்றார்கள் என்று எதிர்கால சந்ததிகள் உணர்ந்து கொள்ளட்டும்.
முஸ்லிம் சமூகத்தில் ஒன்றுபட்ட ஒற்றுமையான ஒரு அரசியலை நிறுவ வேண்டும் என்பதற்கு பாரிய முயற்ச்சியை முன்னெடுத்து செயல்பட்ட ஒரு அணியாக சர்வதேச ரின் ஊடகவலை அமைப்பும் RinTv ஊடகவலை அமைப்பின் நிர்வாகிகளும் திருப்தி கொள்கிறோம்.
இந்த விடயங்களை குறிப்பிட்ட காரணம் WhatsApp தலங்களில் அரசியல் பேசுகின்றவர்கள் அரசியலில் அடிப்படை உருவாக்க விடயங்களை தெரிந்து இருக்க வேண்டும்.
- அரசியல் பேசுவதற்கு முன்பாக ஆன்மீக ரீதியிலான சமூக சிந்தனை இருக்க வேண்டும்.
- முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக தெரிந்து இருக்க வேண்டும்.
- பெரும்பான்மை கட்சிகளின் ஆதரவுடன் இந்த அரசியல் முறைமையை நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வெற்றி பெறும் வேட்பாளர்கள் விலை போகாமல் நாட்டு முன்னேற்றம் சமூக உரிமை விடையங்களில் தெளிவான சிந்தனையுடன் ஆட்சி அமைக்கக்கூடிய கட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
நாம் ஒரு தேசிய அரசியலை தனித்துவமாக செய்வதில் தவறில்லை.
நன்றி
0 Comments