
இன்றைய தினம் வடமேல் மாகாண ஆளுநர் கௌரவ ஹாபீஸ் அஹமத் நசீர் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் (முப்தி ) மற்றும் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் பிரதித் தலைவரும் RinTv தொலைக்காட்சியின் அமைப்பாளரும் பணிப்பாளருமாகிய Deshmani, vishva Kirti, Lanka putra,
GGI ஜபீன் முஹம்மத் அவர்களுக்கும் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது .
இந்தக் கலந்துரையாடலின் போது குறிப்பாக குருநாகல் மாவட்டத்திலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் புதிய ஆசிரியர் நியமனம் தொடர்பாகவும் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு குருநாகல் மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய சிங்கள முஸ்லிம் கிராமங்களின் அபிவிருத்தி விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக விரைவில் தகுந்த தீர்வை பெற்று தருவதாக கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் இன மத பேதமின்றி அனைவருடனும் சகோதரத்துவமாக பேசிப் பழகி அவர்களின் தேவைகளை சிறந்த முறையில் செயல்படுத்துகின்ற கௌரவ ஆளுநர் ஹாபீஸ் அஹமட் நசீர் அவர்களுக்கு ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் (முப்தி) அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார் என்ற விடயத்தையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
0 Comments