RINTV.VETTAI.GALHINNA TODAY


 

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் (தரம் 2) அலங்கரிக்கப்பட்ட வகுப்புகள் திறப்புவிழா!


சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் தரம் 2 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக அலங்கரிக்கப்பட்ட வகுப்புகளை கையளிக்கும் நிகழ்வின் இறுதி நிகழ்வு (21) புதன்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.

இதன்போது தரம் 2 டீ வகுப்பை பூரணமாக வர்ணம் பூசி அலங்கரித்து, வகுப்பறைக்குத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக் மற்றும் பெற்றோர்களும் அதிதிகளாகக் கலந்து கொண்டு வர்ணம்பூசி அலங்கரிக்கப்பட்ட தரம் 2 டீ வகுப்பைத் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர் உதவி அதிபர் உட்பட பகுதித்தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments